கடந்த ஞாயிற்றுக்கிழமை, வட்டார மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தீயணைப்புக் குழாயைப் பயன்படுத்தியதற்காக, கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சித்தி ஸைலாஹ் முகமட் யூசோப்க்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட வேளையில், அவசர தேவைகளுக்காகவும், பொது மக்களின் நலனுக்காகவும் அக்குழாய் நீர் பயன்படுத்தலாம் என்று ஆயர் கிளந்தான் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
அவசரகாலம் மற்றும் பொது நலன் கருதி, இவ்விவகாரம் தொடர்பாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


