கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
தற்போது வரையப்பட்டு வரும் சட்டம், கிக் GIG தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா, அந்த பொருளாதார துறையில் உள்ள 12 லட்சம் தொழிலாளர்களைப் பாதுகாப்பதாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸா கேட்டுக் கொண்டார்.
கோவிட் 19 பரவலுக்குப் பிறகு மலேசியாவின் முதுகெலும்பாக கிக் GIG தொழில் துறை விளங்குகிறது. எனவே அந்தத் துறையைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க அந்தச் சட்ட அம்சங்கள் வலிமை மிகுந்ததாக இருக்க வேண்டும் என்று நூருல் இஸா வலியுறுத்தினார்.








