கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிலாங்கூர், அம்பாங் ஜெயாவில் உள்ள பண்டான் இண்டா உணவகத்தின் முன்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பில் போலீசார் இதுவரையில் 8 பேரை கைது செய்துள்ளனர். விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 19 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 8 பேரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
உணவகத்தின் முன் போடப்பட்டுள்ள நாற்காலி, மேஜைகளை தூக்கி எறிந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட இச்சம்பவத்தினால் உணவகத்தில் இருந்த பொது மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இது தொடர்பான வீடியோ காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Related News

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்


