காஜாங், டிசம்பர்.17-
இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது பராமரிப்பில் விடுப்பட்டுள்ள சிறுவனை சித்ரவதை செய்து காயம் விளைவித்த குற்றத்திற்காக குழந்தை பராமரிப்பாளர் ஒருவருக்கு காஜாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
47 வயது நுர்டியானா லனோன்மிங் என்ற அந்த குழந்தைப் பராமரிப்பாளர், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் சந்தேகத்தை ஏற்படுத்துவதில் தவறிவிட்டார் என்று நீதிபதி மஸுலியானா அப்துல் ரஷிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








