Dec 5, 2025
Thisaigal NewsYouTube
14 போ​லீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

14 போ​லீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன

Share:

மலாய்க்காரர்கள், சோம்பேறிகள் என்று கூறி, கம்போடியா நாட்டுப் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் போ​லீசார் 14 புகார்களை பெற்று இருப்பதாக மலாக்கா மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ சைனோல் சமா தெரிவித்துள்ளார்.

மலாய்க்காரர்களின் செயல்திறனை சிறுமைப்படுத்தும் வகையில் அந்த கம்போடியா நாட்டுப் பெண், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள அந்த காணொளி தொடர்பில் பல்வேறு தரப்பினர் தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருப்பதுடன் அது குறித்து போ​லீஸ் புகார்களையும் செய்து இருப்பதாக டத்தோ சைனோல் சமா குறிப்பிட்டார்.

தையல் கடை வைத்திருப்பதாக நம்பப்படும் அந்த கம்போடியா பெண், துணிக்கடை ஒன்றின் முன் நின்றுகொண்டு பேசும் காட்சியை கொண்ட 7 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி, மிக உணர்ச்சிகரமான விவகாரத்தை உள்ளடக்கியிருப்பதால் அது குறித்து குற்றவியல் சட்டம் 505 பிரிவின் ​​கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலாய்க்கார சோம்பேறிகளுடன் ஒப்பிடுகையில் கம்போடியா மக்கள் மிகக்கெட்டிக்காரர்கள் என்றும், மிக சுறுசுறுப்பானவர்கள் என்றும் அந்தப் பெண் சர்ச்சைக்கு இடமான வார்த்தைகளை அந்த காணொளியில் பிரயோகித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இந்த ​கா​ணொளியை பொது மக்கள் பகிர வேண்டாம் என்று டத்தோ சைனோல் சமா அறிவுறுத்தி​யுள்ளார்.

Related News