Sep 15, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: லிட்டருக்கு 5 சென் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: லிட்டருக்கு 5 சென் அதிகரிப்பு

Share:

நாடு முழுவதும் மானியம் இல்லாத ரோன் 97, ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளை ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் லிட்டருக்கு 5 சென் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, ரோன் 97 பெட்ரோல் லிட்டருக்கு ரிங்கிட் 4.30 ஆகவும், மானியம் இல்லாத ரோன் 95 ரிங்கிட் 3.82 ஆகவும் உயர்கிறது.

அதேவேளை, மானியம் இல்லாத டீசல் விலை லிட்டருக்கு ரிங்கிட் 4.72 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைகள் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இதனிடையே, மானிய விலையில் விற்கப்படும் எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை. புடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு ரிங்கிட் 1.99 ஆகவும், புடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் ரிங்கிட் 2.10 ஆகவும் தொடர்கிறது.

Related News