Oct 4, 2026
Thisaigal NewsYouTube

யோங் பெங் பள்ளியில் 16 வயது மாணவி சடலமாக மீட்பு: கொலை என போலீசார் சந்தேகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யோங் பெங் பள்ளியில் 16 வயது மாணவி சடலமாக மீட்பு: கொலை என போலீசார் சந்தேகம்

ஜோகூர் மாநிலம் பத்து பஹாட்டை அடுத்த யோங் பெங் பகுதியில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில், 16 வயது மாணவி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரின் சோஃபியா முஹமட் கைரோல் ஃபைசால் என அடையாளம் காணப்பட்டுள்ள நான்காம் படிவ மாணவியான அவர், நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் கூடுதல் வகுப்புக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பாததால், அவரது பாட்டி பள்ளிக்கு சென்று தேடியதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பள்ளியின் மண்டபத்தில் மாணவி உடலில் காய்ந்த ரத்தக் கறைகளுடன், சுயநினைவின்றிக் கிடந்ததாகவும், பின்னர் அவர் உயிரிழந்தது தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களும் ஊடகங்களும் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஜோகூர் மாநில துணை போலீஸ் தலைவர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், தற்போது எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்த இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்தை சந்தேகத்திற்குரிய கொலை வழக்காக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, விசாரணைக்கு உதவும் வகையில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →