அலோர் ஸ்டார், அக்டோபர்.04-
நீரோட்டம் நிறைந்த மதுகுவில் கால் இடறி விழுந்த சிறுவன் பரிதாபமாக மாண்டார். இந்தச் சம்பவம், இன்று சனிக்கிழமை அலோர் ஸ்டார், முக்கிம் லங்கார், கம்போங் அலோர் செட்டோல் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இன்று காலையில் அந்த நீரோட்டத்தில் 13 வயது சிறுவன், மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சித்தி நோர் சலாவாத்தி சாஅட் தெரிவித்தார்.








