நிபோங் தெபால், ஜூலை 03-
ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் DAP கட்சி, அமைச்சரவையில் முன்வைக்கப்படும் இஸ்லாம் சார்ந்த எந்தவொரு நிகழ்ச்சிகளையும் இதுவரையில் எதிர்த்ததில்லை.
மாறாக, அந்நிகழ்ச்சிகளை அமலாக்கம் செய்யும் முடிவுகளுக்கு அக்கட்சி மதிப்பளித்து வந்துள்ளதாக, துணைப்பிரதமர் டத்தோ சேரி அஹ்மத் சாஹித் ஹமிடி தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்தின் கீழ், மலாய் மற்றும் இஸ்லாம் சமயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, பல்வேறு குற்றச்சாட்டுகளை சில தரப்பினர் முன்வைத்தாலும், DAP கட்சியின் வசமிருக்கும் பினாங்கு மாநிலத்தில், இஸ்லாம் சமயத்தினருக்கு பலனளிக்கக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் அமல்படுத்துவதை, அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரப்பூர்வ சமயமாக இஸ்லாம், மலாய்க்காரர்களின் அடிப்படை உரிமை, மலாய் ஆட்சியாளர்களின் நிலை என கூட்டரசு அரசியலைமைப்பில் கூறப்பட்டுள்ள விவகாரங்களில், DAP கட்சியினர் மிகுந்த கவனமாக உள்ளனர்.
ஆகையால், மடானி அரசாங்கத்தில் இஸ்லாம் சமயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, சுங்கை பக்கப் இடைத்தேர்தலுக்கான பரப்புரைகளில், எத்தரப்பும் பொய்யான கூற்றுகளை பரப்பக்கூடாது எனவும் சாஹித் ஹமிடி கேட்டுக்கொண்டார்.








