Oct 11, 2026
Thisaigal NewsYouTube

எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் பதவியை ஏற்பதற்கு ரஃபிஸி ரம்லி தகுதியானவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் பதவியை ஏற்பதற்கு ரஃபிஸி ரம்லி தகுதியானவர்

கோலாலம்பூர், மே.27-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், தலைமை ஆணையர் பதவியை ஏற்பதற்கு பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி தகுதியானவர் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸையிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நேர்மை, நெஞ்சுரம், துணிந்து குரல் கொடுப்பது முதலிய குணாதிசயங்களைப் பெற்றுள்ள ரஃபிஸி ரம்லி, எஸ்பிஆர்எம் தலைமை ஆணையராக நியமிக்கப்பட வேண்டும் என்று வலைவாசிகள் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றிய ஸையிட் இப்ராஹிம், மக்களின் கருத்தைத் தம்மால் தவிர்க்க இயலாது என்றார்.

வலைவாசிகளின் பரிந்துரைகள் ஓர் ஆரோக்கியமான அறைகூவலாகும் என்று ஸையிட் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார். எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியைப் போல் துணிச்சல் நிறைந்த ஒருவர் கிடைத்து விட்டால், அஸாம் பாக்கியின் பதவிக் காலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று கருத்து தெரிவித்துள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பதில் அளிக்கும் வகையில் வலைவாசிகள், எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் பதவிக்கு ரஃபிஸி ரம்லி பெயரை முன்மொழிந்து வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை