Aug 12, 2026
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்து தீப்பிடித்துக் கொண்டது: 28 பயணிகள் உயிர்த் தப்பினர்
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்து தீப்பிடித்துக் கொண்டது: 28 பயணிகள் உயிர்த் தப்பினர்

Share:

கோலாலம்பூர், மே.30-

விரைவு பேருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் 28 பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த் தப்பினர். இச்சம்பவம் நேற்று இரவு 9.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 406 ஆவது கிலோமீட்டரில் கமுந்திங் அருகில் நிகந்தது.

தீயின் ஜுவாலை, பேருந்தின் நாலா புறமும் பரவுவதற்கு முன்னதாகவே 28 பயணிகளும் அவசர அவசரமாக வெளியேறியதைத் தொடர்ந்து அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி, அந்த வாகனம் பேருந்தின் அடியில் சிக்கித் தீப் பொறிகளை உண்டு பண்ணியதாக நம்பப்படுகிறது. எனினும் மோட்டார் சைக்கிளோட்டி, சொற்பக் காயங்களுடன் உயிர் தப்பியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

Related News