Dec 2, 2025
Thisaigal NewsYouTube
33 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

33 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்

Share:

கிளந்தானில், கடந்த 5 ஆண்டுகளில், 33 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் அரச மலேசிய சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

2019 முதல் 2023 ஆண்டு மே மாதம் வரையில், 27 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் மாத்திரைகளும், 6 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 248 கிலோகிராம் எடைக் கொண்ட கஞ்சா போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் தெரிவித்தார்.

இதுவரையில், போதைப்பொருள் தொடர்பான 8 வழக்குகள் தீர்க்கப்பட்ட வேளையில், அவை தேசிய எல்லை வழியாக கொண்டு வரப்பட்டவை என்று இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் கண்டறியப்பட்டதாக வான் ஜமால் குறிப்பிட்டார்.

Related News