கோலாலம்பூர், அக்டோபர்.19-
Fengshen எனும் வெப்பமண்டலப் புயல் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியா இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் புயல் சபா, கூடாட்டின் வடகிழக்கில் சுமார் 961 கி.மீ தொலைவில் மணிக்கு அதிகபட்சம் 65 கி.மீ வேகத்தில் காற்றை உண்டாக்கி வருகிறது. எனினும், தற்போது மணிலா நகருக்கு மேற்கில் உள்ள இந்தப் புயலால் மலேசியாவிற்கு எவ்வித குறிப்பிடத்தக்க பாதிப்பும் இல்லை என்று மெட்மலேசியா உறுதியளித்துள்ளது.