Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மலேசியர்களுக்கு மீண்டும் இலவச இ-விசா சலுகை: இந்தியா நடைமுறைப்படுத்தியது
தற்போதைய செய்திகள்

மலேசியர்களுக்கு மீண்டும் இலவச இ-விசா சலுகை: இந்தியா நடைமுறைப்படுத்தியது

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

இந்தியாவிற்குச் செல்லும் மலேசியர்களுக்கு இ-விசா சலுகையை, இந்தியா நேற்று மாலை 4 மணி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தியது.

இந்த இ-விசாவின் மூலம் மலேசியர்கள், இந்தியாவில் 30 நாட்கள் தங்குவதற்கானச் சலுகையை மீண்டும் பெறுகின்றனர்.

இந்தியா வழங்கி வந்த இ-விசா சலுகை, கடந்த ஜுன் மாதம் 30 ஆம் தேதியுடன் காலாவதியானது. இந்த ஜுலை முதல் தேதியிலிருந்து மலேசியர்கள், இந்திய விசாவைப் பெறுவதற்கு சராசரி 150 ரிங்கிட் செலுத்தி, வந்தனர். கடந்த 21 நாட்களாக கட்டண அடிப்படையில் இருந்த இ-விசா அமலில் இருந்த வேளையில், நேற்று மாலையிலிருந்து இலவசச் சலுகையுடன் அது மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசாங்கம் அல்லது மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. இருந்த போதிலும் இந்தச் சலுகை நேற்று மாலை முதல் வழங்கப்பட்டு இருப்பதை நாட்டின் முன்னணி பயண நிறுவனமான கேபிஎஸ் டிராவல் ஏஜென்சியின் உரிமையாளர் கே.பி.சாமி உறுதிப்படுத்தினார்.

கடந்த ஜுன் 30 ஆம் தேதியுடன் காலாவதியான மலேசியர்களுக்கான இ-விசா சலுகை மீண்டும் திறந்து விடப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.கா. தலைவர் அண்ணாமலையின் செயலாளர் மற்றும் சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜனுடன் தாம் பேசிக் கொண்டு இருந்ததாகவும், அவர்களின் ஆலோசனையின் பேரில் ஓர் அதிகாரப்பூர்வமான கடிதத்தை அனுப்புமாறு கேட்டுக் கொண்ட நிலையில் இலவச இ–விசா நேற்று மாலை முதல் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளதாக கே.பி.சாமி தெரிவித்தார்.

Related News