Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சொந்த தாயைக் கொன்றதாக, கே. எஸ் சுகன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

சொந்த தாயைக் கொன்றதாக, கே. எஸ் சுகன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது

Share:

பேராக், ஈப்போவில் இரு வாரங்களுக்கு முன்பு, சொந்த தாயைக் கொலை செய்ததாக, 36 வயது கே.எஸ் சுகன் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி சித்தி நோரா ஷரிஃப் முன்னிலையில், தமிழ் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட நிலையில், தம்மீதான குற்றச்சாட்டு புரிவதாக அவர் தலையை அசைத்தார்.

ஆயினும், கொலை தொடர்பான விசாரனை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளதால், அவரிடம் வாக்குமூலம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

இம்மாதம் 12ஆம் தேதி, பின்னிரவு மணி 1 தொடங்கி காலை மணி 9.30 வரைக்குமான இடைப்பட்ட காலத்தில், தாமான் ரெஸ்து ஜெயா-விலுள்ள வீட்டில் 60 வயதுடைய எனும்அவரது தாயைக் கொலை செய்ததாக, கே. எஸ் சுகன் மீது குற்றவியல் சட்டம் செஷன்ஸ் 302-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவ்வாடவருக்கு மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரைக்குமான சிறை விதிக்கப்படலாம்.

மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12க்கும் குறையாத பிரம்படிகளை வழங்க, அச்சட்டம் வகை செய்கின்றது.

அரசு தரப்பு வழக்கறிஞராக நூரிசா இஸ்மா முஹம்மது ஹுசைனி பிரதிநிதித்த வேளை, கேஸ் சுகன்னை வழக்கறிஞர் யாரும் பிரதிநிதிக்கவில்லை.

அவர் வழக்கறிஞரை பிரதிநிதிப்பதற்கு ஏதுவாக, வழக்கின் மறு செவிமடுப்பை நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இம்மாதம் 12ஆம் தேதி, சம்பந்தப்பட்ட வீட்டின் வரவேற்பறையில், எஸ் இண்டரா தலையில் ஏற்பட்டிருந்த பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடக்க, சடலமாக மீட்கப்பட்டார்

Related News