May 22, 2026
Thisaigal NewsYouTube
தங்குவிடுதியில் மனைவியை தாக்கிய கணவர்; விசாரணை அறிக்கையை திறந்தது போலிஸ்
தற்போதைய செய்திகள்

தங்குவிடுதியில் மனைவியை தாக்கிய கணவர்; விசாரணை அறிக்கையை திறந்தது போலிஸ்

Share:

நெகிரி செம்பிலான், ஜூன் 20-

நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன்-னிலுள்ள ஒரு தங்கும்விடுதியில் ஆடவர் ஒருவர் அவரது மனைவியை தாக்கியது தொடர்பில், போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது.

37 மற்றும் 38 வயதுடைய அத்தம்பதியிடையே நிகழ்ந்த சண்டைக் குறித்து 31 விநாடிகள் கொண்ட காணொலி சமூக ஊடகங்களில் பரவலான நிலையில், அது குறித்து நேற்று மாலை மணி 3 அளவில் தங்கள் தரப்புக்கு தகவல் கிடைத்ததாக, போர்ட் டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பர்ண்டன் அய்டி ஷாம் மொஹமட் தெரிவித்தார்.

தொடக்கக்கட்ட விசாரணையில், அச்சம்பவம் கடந்த மே மாதம் 24ஆம் தேதி காலை மணி 9.50க்கு, போர்ட் டிக்சன்-னிலுள்ள ஒரு தங்கும்விடுதியில் நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.

சம்பந்தப்பட்ட தங்கும்விடுதியில் வேறொரு பெண்ணுடன் கணவர் தங்கியிருந்ததை அறிந்த மனைவி, குழந்தை பிறந்து ஒருவாரம் ஆனதைக்கூட பொருட்படுத்தாமல், நேரிடையாக அங்கு சென்று கூச்சலிட்டுள்ளார்.

அப்பெண்ணை அவ்வாடவர் தாக்கியதால், அவருக்கு கன்னத்தில் காயமும் உடலின் சில பகுதிகளில் வலியும் ஏற்பட்டது.

அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அய்டி ஷாம் கூறினார்.

Related News