May 22, 2026
Thisaigal NewsYouTube
548 மில்லியன் ரிங்கிட்  சொத்து விவகாரம்: கோலாலம்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எஸ்பிஆர்எம்  மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

548 மில்லியன் ரிங்கிட் சொத்து விவகாரம்: கோலாலம்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எஸ்பிஆர்எம் மேல்முறையீடு

Share:

முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஜைனுதீனின் துணைவியார் தோ புவான் நயிமா அப்துல் காலித் மற்றும் அவரது பிள்ளைகளுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் 548 மில்லியன் ரிங்கிட் முதலீட்டுப் பணத்தை முடக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளது

சிங்கப்பூர் வங்கி கணக்குகளில் உள்ள இந்த சொத்துகளை முடக்கும் தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்ற முடிவை ஏற்றுக்கொண்ட எஸ்பிஆர்எம், இது குறித்து சட்டத்துறை அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தேவையான நிபந்தனைகளை அரசு தரப்பு பூர்த்தி செய்யத் தவறியதால், இந்த சொத்து முடக்க விண்ணப்பத்தை நீதிபதி முகமது ஆரிப் எம்ரான் இன்று தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

Related News