கோலாலம்பூர், டிசம்பர்.22-
போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சர்ச்சைக்குரிய பிரபல ராப் பாடகர் Namewee விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையின் முடிவில், Namewee-ஐ விடுதலை செய்வதாக நீதிபதி எஸ். அருண்ஜோதி தீர்ப்பு வழங்கினார்.
Namewee-இன் சிறுநீர் பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை துணை அரசு தரப்பு வழக்கறிஞர் அம்ரிட்பிரிட் கவுர் ரண்டாவா நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் மீது தொடரப்பட்டிருந்த குற்றச்சாட்டை அரசுத் தரப்பு திரும்பப் பெறுவதாகவும் அம்ரிட்பிரிட் கவுர் தெரிவித்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கில் இருந்து Namewee-ஐ முழுமையாக விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.








