May 6, 2026
Thisaigal NewsYouTube
எல்லைப் பாதுகாப்பு: 'கை அசைக்கும்' கலாச்சாரத்திற்குத் தடை; குடிநுழைவுத் துறை கடும் எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

எல்லைப் பாதுகாப்பு: 'கை அசைக்கும்' கலாச்சாரத்திற்குத் தடை; குடிநுழைவுத் துறை கடும் எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

நாட்டின் எல்லை நுழைவாயில்களில் முறையான ஆவணச் சோதனையின்றி, வெறும் 'கை அசைப்பதன்' மூலம் வாகனங்களை அனுமதிக்கும் முறையற்ற கலாச்சாரத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ளப் போவதில்லை என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார். மலேசியா - தாய்லாந்து எல்லைச் சாவடிகளில் இத்தகைய விதிமீறல்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது போன்ற அற்பமான சமரசங்கள் நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், குற்றச் செயல்களுக்குப் பாதையாகவும் அமையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஒவ்வொரு பயணியும் கண்டிப்பாகத் தங்களின் கடப்பிதழ் அல்லது எல்லை அனுமதி அட்டையைச் சோதனையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். குற்றச் சிண்டிகேட்டுகளுக்கும் வெளித்தரப்பு அழுத்தங்களுக்கும் பணியாமல் நேர்மையுடன் செயல்படுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ள அவர், பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை நேரடியாகத் துறையிடம் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்