பினாங்கு மாநிலத்தில் 38 இலக்கவியல் பொருளாதார மையங்களை மேம்படுத்துவதற்கு தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு சுமார் 4 கோடியே 94 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அதன் துணை அமைச்சர் தியோ நீ சிங் அறிவித்துள்ளார்.
PEDI என்று அழைக்கப்படும் இந்த 38 இலக்கவியல் பொருளாதார மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுவற்கான செலவினத்தையும் இந்த நிதி ஒதுக்கீடு உள்ளடக்கியிருப்பதாக தியோ நீ சிங் குறிப்பிட்டுள்ளார்.
பினாங்கு மாநிலத்திற்கு மேற்கொண்டுள்ள அலுவல் பயணத்தின் ஒரு பகுதியாக செமராக் கெமிலாங் @ புலாவ் அமன் டான் கோம்டிஸ் மாபோ எனும் நிகழ்வையொட்டி புலாவ் அமான் னில் ஓரிட மக்களை சந்திக்கும் நிகழ்வில் துணை அமைச்சர் தியோ நீ சிங் இதனை தெரிவித்தார்.
PEDI இலக்கவியல் பொருளாதார மையங்கள் நிறுவப்படும் இடங்களில் ஒன்றாக புலாவ் அமான் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் இப்பகுதியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்டோர் இதன் அனுகூலத்தை பெறுவர் என்று துணை அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளையில் புலாவ் அமான் னில் அமையவிருக்கும் புதிய PEDI மையம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
PEDI மையம் செயல்படுவதற்கு கிட்டத்தட்ட 13 லட்சம் வெள்ளியை அரசாங்கம் செலவிடுகிறது. பினாங்கில் தற்போது 3 PEDI மையங்கள் செல்படுகின்றன. இரண்டு பாலிக் புலாவ் விலும், ஒன்று தாசெக் கெலுகோர் ரிலும் செயல்படுவதாக தியோ நீ சிங் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


