ஜசெக கட்சித் தலைவர்களுக்கும் கம்யூனிஸ்டு தலைவருடனான தொடர்பு குறித்து பேசிய கெபாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்ஸ்துரா இன்று புக்கிட் அமான் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மிடம் உள்ள ஆதாரங்களை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
யீருப்பினும் அவை சரியான ஆதாரங்களா என அவர்களே முடிவு செயப்படும் என காவல் துறையின் முடிவுக்கு விட்டு விட்டதாக சித்தி மஸ்துராவின் வழக்கறிஞர் அஹ்மாட் அம்சார் அஹ்மாட் அஸ்லான் தெரிவித்தார்.








