கோலாலம்பூர், அக்டோபர்.29-
பூடி95-இன் கீழ் மைகாட் சரிபார்ப்பு முறை, அதன் முதல் மாதத்தில் சீராகச் செயல்பட்டு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பூடி மடானி ரோன்95 எரிபொருள் மானியத் திட்டத்தின், சீரான செயல்பாட்டை உறுதிச் செய்வதற்கும், தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கும், அரசாங்கம் படிப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மானியத் தகுதிக்கான சரிபார்ப்பு வழிமுறையாக, மைகாடைப் பயன்படுத்தி அதன் நம்பகத்தன்மையை உறுதிச் செய்வதற்காக விரிவான தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூடி95-இன் கீழ், செல்லுபடியாகும் மைகாட் மற்றும் செயலில் உள்ள ஓட்டுநர் உரிமம் கொண்ட அனைத்து மலேசியர்களும், மாதம் 300 லிட்டர் வரையில், லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளுக்கு, ரோன்95 எரிபொருளை வாங்கத் தகுதி பெறுகின்றார்கள்.








