Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மதுபோதையில் திளைத்திருக்கும் வாகனமோட்டிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மதுபோதையில் திளைத்திருக்கும் வாகனமோட்டிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்

ஜோகூர்பாரு, நவ. 23-


மது போதையில் திளைத்திருக்கும் வாகனமோட்டிகள் குறிப்பாக விபத்தில் உயிர் சேதம் ஏற்படும் சம்பவங்களுக்கு காரணமாக இருக்கின்ற வாகனமோட்டிகளுக்கு கூடிய பட்சம் கடும் தண்டனை விதிப்பதில் நீதிபதிகளும், மாஜிஸ்திரேட்டுகளும் துணிவுடன் செயல்பட வேண்டும் என்று பாசீர் கூடாங் எம்.பி. ஹசான் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டார்.

மதுபோதையில் வாகனமோட்டினால் குறைந்த தண்டனையுடன் தப்பிக்க முடியாது என்பதற்கு வாகனமேட்டிகளுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கில் இந்த கடும் தண்டனை அவசியமாகும் என்று ஹசான் கரீம் வலியுறுத்தினார்.

1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் வாகனமோட்டிகளுக்கு கூடிய பட்சம் வரை தண்டனை விதிக்க வகை செய்கிறது.

அந்த சட்டத்தின் உள்ளார்ந்த பயன்பாட்டை நீதிபதிகளும், மாஜிஸ்திரேட்டுகளும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்ட வல்லுநரான ஹசான் கரீம் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →