Feb 19, 2026
Thisaigal NewsYouTube
கிரிப்டோகரன்சி கொள்ளைத் தொடர்பாக 12 போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

கிரிப்டோகரன்சி கொள்ளைத் தொடர்பாக 12 போலீசார் கைது

Share:

காஜாங், பிப்ரவரி.19-

காஜாங்கில் நடந்த சோதனை ஒன்றில், சீன நாட்டவர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தைக் கொள்ளையடித்ததற்காக, மத்திய வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 12 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சீன நாட்டவர் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஜாங், Country Heights-இல் பங்களா ஒன்றில், தானும் தனது 7 நண்பர்களும் தங்கியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி, அங்கு சோதனையிட்ட அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக, கையிருப்பில் இருந்த கிரிம்டோகரன்சியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அந்நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர்களிடம் பேரம் பேசிய அதிகாரிகள் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை குறிப்பிட்ட முகவரிக்குப் பரிமாற்றம் செய்யும்படி கூறியதாகவும் அந்நபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் 24 முதல் 47 வயதுடையவர்கள் ஆவர்.

அவர்களில், இன்ஸ்பெக்டர், சார்ஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் அடங்குவர் என காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த சிறப்புக் குழு தெரிவித்துள்ளது.

Related News

மங்காத்தால் பெண் கொடூரக் கொலை வழக்கு: உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்கிறது

மங்காத்தால் பெண் கொடூரக் கொலை வழக்கு: உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்கிறது

சட்டப்பூர்வமாக நடத்தப்படும் இஸ்லாமிய பிரச்சாரங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தாது: அன்வார் விளக்கம்

சட்டப்பூர்வமாக நடத்தப்படும் இஸ்லாமிய பிரச்சாரங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தாது: அன்வார் விளக்கம்

திரங்கானு கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ள ஜெல்லி மீன்களைத் தொட வேண்டாம்

திரங்கானு கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ள ஜெல்லி மீன்களைத் தொட வேண்டாம்

ரமலான் மாதம் என்பது சிந்தனைகளைச் சீர்படுத்தி புதுப்பித்துக் கொள்ளும் காலம் - அன்வார் விளக்கம்

ரமலான் மாதம் என்பது சிந்தனைகளைச் சீர்படுத்தி புதுப்பித்துக் கொள்ளும் காலம் - அன்வார் விளக்கம்

புதிய ஊழல் விசாரணை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக Noor Ruwena Md Nurdin நியமனம்

புதிய ஊழல் விசாரணை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக Noor Ruwena Md Nurdin நியமனம்

சமரசம் கிடையாது: ஜோகூர் அரசு நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை - மலேசிய மாமன்னர் எச்சரிக்கை

சமரசம் கிடையாது: ஜோகூர் அரசு நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை - மலேசிய மாமன்னர் எச்சரிக்கை