Sep 24, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்கள் முன்கூட்டியே பயணிக்க அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்கள் முன்கூட்டியே பயணிக்க அறிவுறுத்து

Share:

சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்கள், காலை நேர நெரிசலைத் தவிர்க்க வழக்கத்தைவிட முன்னதாகவே தங்களது பயணத்தைத் தொடங்குமாறு மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான எம்.சி.பி.ஏ அறிவுறுத்தியுள்ளது.

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் நெரிசல் மிகுந்த நேரத்தைத் தவிர்த்து பயணிக்கவும், திறந்திருக்கும் குடிநுழைவு சோதனை கவுன்டர்களைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில், மைனிஸ் தளத்தைப் பயன்படுத்துவோர், சோதனைப் பகுதிக்கு வருவதற்கு முன்பே தங்களது கியூஆர் குறியீட்டை புதுப்பித்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மலேசியா–சிங்கப்பூர் நில எல்லையைக் கடப்பதால், பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News