Nov 18, 2026
Thisaigal NewsYouTube

தரவு மையங்களின் அதிவேக வளர்ச்சி – நாட்டின் மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் -இயோ பீ யின் கவலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தரவு மையங்களின் அதிவேக வளர்ச்சி – நாட்டின் மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் -இயோ பீ யின் கவலை

மலேசியாவில் தரவு மையங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் அளவுக்கு நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பு உள்ளதா என்ற கவலை எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் பேசிய பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின், தரவு மையங்களின் வளர்ச்சி, மின்சார வாகனப் பயன்பாடு மற்றும் தொழில்துறையின் எரிசக்தி மாற்றம் ஆகியவை மின்சாரக் கட்டமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார்.

தரவு மையங்களை அமைக்க ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தேவைப்படும் நிலையில், புதிய எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க நான்கு முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், தீபகற்ப மலேசியாவின் தற்போதைய மின்சாரக் கையிருப்பு அளவு குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் இயோ பீ யின் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →