மலேசியாவிற்கு இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர் எமனுவேல் மெக்ரோனின் மனைவி பிரிஜிட் மெக்ரோன், பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் பத்துமலையில் உள்ள 272 படிக்கட்டுகளைக் கடந்து ஸ்ரீசுப்ரமணியர் ஆலயத்திற்கு சென்றது சமூக ஊடகங்களில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று பெய்த கன மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் குடைகளால் அவரைப் பாதுகாக்க முயன்ற போதும், பிரிஜிட் மெக்ரோன் தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறிச் சென்று ஆலயத்தைப் பார்வையிட்டார்.
இந்நிலையில், அவரது மன உறுதியைப் பலரும் சமூக ஊடகங்களில் பாராட்டி வருகின்றனர்.
பிரிஜிட் மெக்ரோனின் இந்தச் செயல், மலேசியாவின் பன்முகக் கலாசாரம் மற்றும் சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததுள்ளதாக சமூக ஊடகவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.








