வலுவான நிறுவனத்தை உருவாக்குவதற்கு, பணியாளர்களின் உள்ளார்ந்த திறமைகளைக் கண்டறிந்து அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கும் பணிச்சூழல் அவசியம் என எஃப்எம்டி மீடியா நிறுவனத்தின் செயல் முறை தலைவர் நெக்சன் ஃபெர்னாண்டஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான அனைத்துலக தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் கருத்தரங்கில் பேசிய அவர், பணியாளர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதுடன், தொடர் பயிற்சிகள் மற்றும் புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளையும் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றார்.
மேலும், ஊடகத்துறையில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்கொள்ள எஃப்எம்டி நிறுவனம், செய்தியாளர்களுக்குப் பல்வேறு திறன்களில் பயிற்சி அளித்ததுடன், காணொளி செய்தி தயாரிப்பிலும் விரிவாக்கம் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.








