Nov 17, 2026
Thisaigal NewsYouTube

சண்டக்கான் ஆயுத மோதல் காணொளி வைரல் – 11 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சண்டக்கான் ஆயுத மோதல் காணொளி வைரல் – 11 பேர் கைது

சபா, சண்டக்கானில் உள்ள பசார் பண்டார் ராமாய்-ராமாய் சந்தையில், ஆயுதம் ஏந்திய இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் மலேசியர்கள் என்றும், ஆறு பேர் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் என்றும் சண்டக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜார்ஜ் அப்துல் ரக்மான் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் 15 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

நேற்று மாலை 7.36 மணியளவில் NG999 அவசர உதவி எண்ணுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்ட தவறான புரிதலே இந்த மோதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், ஆயுதங்களைக் கண்டறிவதற்கான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஈப்போ பெர்ச்சாமில் நான்கு இரட்டை மாடி வீடுகளில் தீ விபத்து

ஈப்போ பெர்ச்சாமில் நான்கு இரட்டை மாடி வீடுகளில் தீ விபத்து

குளுவாங்கில் முதியோர் இல்லத்தை வெள்ளம் சூழ்ந்தது – 16 பேர் பத்திரமாக மீட்பு

குளுவாங்கில் முதியோர் இல்லத்தை வெள்ளம் சூழ்ந்தது – 16 பேர் பத்திரமாக மீட்பு

கெப்போங் பாராங் தாக்குதல்: துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் இணைத்த போலீஸ்காரரின் விரல்களில் உணர்வு திரும்புகிறது

கெப்போங் பாராங் தாக்குதல்: துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் இணைத்த போலீஸ்காரரின் விரல்களில் உணர்வு திரும்புகிறது

கிள்ளான், ஷா ஆலாம் பகுதிகளில் திடீர் வெள்ளம் – பல முக்கிய சாலைகள் பாதிப்பு

கிள்ளான், ஷா ஆலாம் பகுதிகளில் திடீர் வெள்ளம் – பல முக்கிய சாலைகள் பாதிப்பு

எஞ்சியுள்ள 880 ஆசிரியர் காத்திருப்புப் பட்டியல் விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதிக்குள் நியமன வாய்ப்பு

எஞ்சியுள்ள 880 ஆசிரியர் காத்திருப்புப் பட்டியல் விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதிக்குள் நியமன வாய்ப்பு

போலீஸ் வேன் விபத்துக்குத் திடீர் டயர் வெடிப்பே காரணம் – பேரா போலீஸ் தலைவர் தகவல்

போலீஸ் வேன் விபத்துக்குத் திடீர் டயர் வெடிப்பே காரணம் – பேரா போலீஸ் தலைவர் தகவல்