Nov 17, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் வேன் விபத்துக்குத் திடீர் டயர் வெடிப்பே காரணம் – பேரா போலீஸ் தலைவர் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் வேன் விபத்துக்குத் திடீர் டயர் வெடிப்பே காரணம் – பேரா போலீஸ் தலைவர் தகவல்

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த போலீஸ் வேன் விபத்துக்குப் பின்புற இடது பக்க டயர் திடீரென வெடித்ததே காரணமாக இருக்கலாம் என பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பேரா மாநில போலீஸ் தலைமையகத்திலிருந்து மலாக்காவுக்குச் சென்று கொண்டிருந்த மெக்ஸுஸ் ரக வேன், நெடுஞ்சாலையின் 352ஆவது கிலோமீட்டரில் காலை 11.35 மணியளவில் சென்றபோது டயர் வெடித்ததாக அவர் கூறினார்.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், நெடுஞ்சாலையின் நடுவிலிருந்த உலோகத் தடுப்பில் மோதியதாகவும், அதன் தாக்கத்தில் சில பயணிகள் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். இதர 10 பேர் காயமுற்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →