2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணிநியமனத் தேர்வில் காத்திருப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள எஞ்சிய 880 ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சும் கல்விச் சேவை ஆணையமும் இணைந்து நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 4,417 விண்ணப்பதாரர்களில் இதுவரை 3,537 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களுக்கான நியமன நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், காலிப் பணியிடங்கள் மற்றும் அவர்களது கற்பித்தல் தகுதிகளுக்கு ஏற்ப பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.








