இளமையில் தந்தையின் விருப்பத்திற்காக மருத்துவக் கனவைத் துறந்தவர்... பிற்காலத்தில் புற்றுநோயுடன் போராடியவர்... இன்று 84 வயதில் முனைவர் பட்டம் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் மலேசியாவின் டாக்டர் பிரசன்னா முகுந்தன்!
மலாக்காவில் பள்ளிப்படிப்பை முடித்த மூதாட்டி டாக்டர் பிரசன்னா, குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் கல்வி மீதான ஆர்வத்தைக் கைவிடவில்லை. 2020ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படிப்பை இடைநிறுத்தியபோதும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோதுகூட புத்தகங்களையும் மடிக்கணினியையும் உடன் எடுத்துச் சென்று படித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு மீண்டும் படிப்பைத் தொடர்ந்த அவர், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி கல்வித்துறையில் முனைவர் பட்டம் பெற்று தனது வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார்.
கல்விக்கு வயது ஒரு தடையல்ல; விடாமுயற்சி இருந்தால் கனவுகள் நிச்சயம் நனவாகும் என்பதற்கு 84 வயது டாக்டர் பிரசன்னா ஒரு வாழும் நேரடி சாட்சி!








