Nov 17, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் வேன் விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் வேன் விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்

வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பா அருகே போலீஸ்காரர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது நால்வர் காயமடைந்தனர்.

இன்று காலை சுமார் 11.30 மணிக்கு, நெடுஞ்சாலையின் KM351.7 பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹசிம் உறுதிப்படுத்தினார்.

வேனில் 10 போலீஸ்காரர்கள் பயணித்ததாகவும், உயிரிழந்தவரின் உடலும் காயமடைந்தவர்களும் தாப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், விபத்து காரணமாக பிடோர் - சுங்கை இடையே சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் தெரிவித்தது.

பிற்பகல் 1.21 மணி நிலவரப்படி, அவசரப் பாதை மட்டுமே மூடப்பட்டிருந்ததுடன், ஏனைய பாதைகள் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டிருந்தன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாமனாரைக் கொலை செய்ததாகக் கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு

மாமனாரைக் கொலை செய்ததாகக் கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு

புற்றுநோயையும் வென்ற 84 வயது பாட்டி; விடாமுயற்சியால் முனைவர் பட்டம் பெற்று சாதனை

புற்றுநோயையும் வென்ற 84 வயது பாட்டி; விடாமுயற்சியால் முனைவர் பட்டம் பெற்று சாதனை

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்; 6 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்; 6 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

மக்களவைக்குத் தலைமை தாங்கியபடியே விவாதம்; துணைத் தலைவரின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி மனு

மக்களவைக்குத் தலைமை தாங்கியபடியே விவாதம்; துணைத் தலைவரின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி மனு

பிடிபிடிஎன் கடன் நிலுவையைச் சீரமைக்க 20 விழுக்காடு அல்லது 1,000 ரிங்கிட் செலுத்தும் சலுகை

பிடிபிடிஎன் கடன் நிலுவையைச் சீரமைக்க 20 விழுக்காடு அல்லது 1,000 ரிங்கிட் செலுத்தும் சலுகை

சைபர் மிரட்டல், பகடிவதை  விவகாரம்; சமூக ஊடகத் தளங்களுடன் மீண்டும் பேச்சு நடத்தும் அரசாங்கம்! டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி கூறுகிறார்

சைபர் மிரட்டல், பகடிவதை விவகாரம்; சமூக ஊடகத் தளங்களுடன் மீண்டும் பேச்சு நடத்தும் அரசாங்கம்! டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி கூறுகிறார்