Nov 17, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்; 6 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்; 6 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

நெகிரி செம்பிலான் அரச குடும்பப் பதவிச் சர்ச்சை தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நான்கு சர்ச்சைக்குரிய உண்டாங்களும் இரண்டு முக்கியப் பிரமுகர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என சிரம்பான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ரோஸ் மாவார் ரொஸாயின் இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன், வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு நிர்ணயித்தார்.

முன்னாள் உண்டாங்களான முபாரக் டொஹாக், மாரோஃப் மாட் ரஷாட், அப்துல் ரஹிம் யாசின், முஹமட் அப்துல்லா, துங்கு சையிட் ரஸ்மான் துங்கு சையிட் இட்ருஸ் அல் கட்ரி மற்றும் படாருடின் அப்துல் காலிட் ஆகிய ஆறு பேரும் இந்த நடவடிக்கையை எதிர்கொள்கின்றனர்.

நீதிமன்ற ஆவணங்களைப் பெறுவதைத் தவிர்த்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →