Nov 17, 2026
Thisaigal NewsYouTube

கிள்ளான், ஷா ஆலாம் பகுதிகளில் திடீர் வெள்ளம் – பல முக்கிய சாலைகள் பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிள்ளான், ஷா ஆலாம் பகுதிகளில் திடீர் வெள்ளம் – பல முக்கிய சாலைகள் பாதிப்பு

கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் பகுதிகளில் இன்று பிற்பகல் பெய்த தொடர் கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாகின. ஷா ஆலாமின் செக்‌ஷன் 7 மற்றும் 14 உள்ளிட்ட பகுதிகளிலும், கிள்ளான் நோக்கிச் செல்லும் கெசாஸ் நெடுஞ்சாலையில் கெமுனிங் டோல் சாவடி அருகிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

மேலும், கிள்ளானிலிருந்து ஷா ஆலாம் செல்லும் சாலை, செத்தியா ஆலாம் பகுதியிலிருந்து கிள்ளான் செல்லும் சாலை ஆகியவையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

மாலை 4.40 மணியளவில் ஐ-சிட்டி ஷா ஆலாம் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டதாகப் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இதனால் பல சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனமோட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →