Nov 17, 2026
Thisaigal NewsYouTube

மடானி மருத்துவத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தம் – அரசாங்கத்தின் புதிய சுகாதார அணுகுமுறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மடானி மருத்துவத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தம் – அரசாங்கத்தின் புதிய சுகாதார அணுகுமுறை

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச ஆரம்ப சுகாதாரச் சேவைகளை வழங்கி வந்த மடானி மருத்துவத் திட்டம், 2027ஆம் ஆண்டு முதல் தொடரப்படாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகளின் நெரிசலைக் குறைக்கும் திட்டத்தின் ஆரம்ப நோக்கம் பெருமளவில் நிறைவேறியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி, இத்திட்டத்தின் மூலம் 10 மாவட்டங்களில் உள்ள 1,166 தனியார் கிளினிக்குகளில் 6 லட்சத்து 51 ஆயிரத்து 533 நோயாளிகளுக்கு, மொத்தம் 9 லட்சத்து 98 ஆயிரத்து 358 முறை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இனி நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்ற நீண்டகால நோய்களைக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கான விரிவான சுகாதாரச் சேவைகளில் அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →