Nov 18, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவில் புதிய அவசரகால எச்சரிக்கை முறை நாளை சோதனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவில் புதிய அவசரகால எச்சரிக்கை முறை நாளை சோதனை

மலேசியாவில் அவசரகால எச்சரிக்கைகளை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்கும் வகையில், சிபிஎஸ் (CBS) என்றழைக்கப்படும் புதிய செல்போன் வழி அவசரகால எச்சரிக்கை அனுப்பும் தொழில்நுட்பமானது நாளை சோதனை செய்யப்பட உள்ளது.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி இந்தச் சோதனையை முன்னெடுக்கிறது.

இதன் மூலம் ஆபத்து ஏற்படும் பகுதிகளில் உள்ள செல்போன்களுக்கு நேரடியாக எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற முறை அமலில் உள்ளது.

இந்தச் சோதனை வெள்ளப் பெருக்கு அபாயம் அதிகமுள்ள சிலாங்கூர், கோலாலம்பூர், கிளந்தான் மற்றும் பஹாங் பகுதிகளில் நடைபெறவுள்ளது. அப்போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு செல்போன்களுக்கு எச்சரிக்கை செய்திகள் வரலாம் என்றும் எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

இருப்பினும், அவை உண்மையான அவசர எச்சரிக்கைகள் அல்ல என்றும், சோதனையின் ஒரு பகுதி மட்டுமே என்றும் எம்சிஎம்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜோகூரில் இரு கார்கள் மோதி விபத்து: 17 வயது சிறுவன் உட்பட இருவர் உடல் கருகி பலி

ஜோகூரில் இரு கார்கள் மோதி விபத்து: 17 வயது சிறுவன் உட்பட இருவர் உடல் கருகி பலி

சௌகிட்டில் போலீசார் அதிரடிச் சோதனை: 24 வழிப்பறிகளில் தொடர்புடைய சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சௌகிட்டில் போலீசார் அதிரடிச் சோதனை: 24 வழிப்பறிகளில் தொடர்புடைய சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

பணியாளர்களின் திறமைகளை வளர்த்து அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் – எஃப்எம்டி தலைவர் நெல்சன் பெர்னாண்டஸ் வலியுறுத்தல்

பணியாளர்களின் திறமைகளை வளர்த்து அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் – எஃப்எம்டி தலைவர் நெல்சன் பெர்னாண்டஸ் வலியுறுத்தல்

மடானி மருத்துவத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தம் – அரசாங்கத்தின் புதிய சுகாதார அணுகுமுறை

மடானி மருத்துவத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தம் – அரசாங்கத்தின் புதிய சுகாதார அணுகுமுறை

ஈப்போ பெர்ச்சாமில் நான்கு இரட்டை மாடி வீடுகளில் தீ விபத்து

ஈப்போ பெர்ச்சாமில் நான்கு இரட்டை மாடி வீடுகளில் தீ விபத்து

குளுவாங்கில் முதியோர் இல்லத்தை வெள்ளம் சூழ்ந்தது – 16 பேர் பத்திரமாக மீட்பு

குளுவாங்கில் முதியோர் இல்லத்தை வெள்ளம் சூழ்ந்தது – 16 பேர் பத்திரமாக மீட்பு