கோத்தா கினபாலு, செப்டம்பர்.21-
சபா மாநிலத்தில் இனி உயர்க்கல்வி இலவசம் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஹஜிஜி நோர் அறிவித்துள்ளார்! காலேஜ் யுனிவர்சிட்டி யாயாசான் சபா, காலேஜ் டெக்னோலோஜி யாயாசான் சபா போன்ற சபா மாநிலத்திற்குச் சொந்தமான உயர்க்கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவி வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம், மாணவர்களின் கல்விக் கடன் சுமைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நூறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக் கடன் சுமையிலிருந்து விடுபட, பிடிபிடிஎன் கல்விக் கடன்களுக்கு மானியம் வழங்கவும் மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.








