பினாங்கு, கெப்பாலா பத்தாஸில் உள்ள கால்வாய் ஒன்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
இன்று மாலை 5:03 மணியளவில் ஜாலான் பெர்தாம் பெர்டானா 2 பகுதியில் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
பெர்தாம் மற்றும் கெப்பாலா பத்தாஸ் நிலையங்களைச் சேர்ந்த 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மாலை 5:47 மணியளவில், சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அவனது உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்துவிட்டதை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர். சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கெப்பாலா பத்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.








