Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பொது பள்ளி தேர்வுகளை கோருகிறது சரவாக்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொது பள்ளி தேர்வுகளை கோருகிறது சரவாக்

நவ. 23-

தொடக்கப்பள்ளிகளில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கும், இடைநிலைப்பள்ளிகளில் மூன்றாம் படிவ மாணவர்களுக்கும் நடத்ப்பட்டு வந்த அரசாங்கத் தேர்வுகளை மீண்டும் நடத்தும்படி சரவா மாநிலத்தில் உள்ள சில தாய்மொழிப்பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் வலியுறுத்தி வருவதாக மாநில துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநில அளவில் அரசாங்கத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் தாய்மொழிப்பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் மிக ஆர்வமாக இருப்பதாக சரவாக் மாநில கல்வி, புத்தாக்க மற்றும் திறன் மேம்பாடு துணை அமைச்சர் டாக்டர் அனுவார் ராபே குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய அரசாங்கத்துடன் விவாதிப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →