கூச்சிங், செப்டம்பர்.12-
சபா, சரவாக் மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலனை செய்வதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளார் என்று துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
இது தேர்தல் ஆணையமான எஸ்பிஆரின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரமாக இருந்தாலும் கூடுதல் தொகுதிகளைப் பரிசீலிக்க பிரதமர் இணக்கம் தெரிவித்து இருப்பதாக ஃபாடில்லா யூசோஃப் குறிப்பிட்டார்.
இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையில் நடைபெற்ற, 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்த அமலாக்க நடவடிக்கை மன்றக் கூட்டத்தின் போது சபா, சரவாக் மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்படட்தாக துணைப்பிரதமர் தெரிவித்தார்.








