Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மற்றொரு KK மார்ட் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
தற்போதைய செய்திகள்

மற்றொரு KK மார்ட் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30-

அல்லா என்ற சொல் பொறிக்கப்பட்ட காலுறைகளை விற்பனை செய்ததற்காக பலத்த கண்டனத்திற்கு இலக்கான சர்ச்சைக்குரிய சங்கிலித் தொடர்பு விற்பனை நிறுவனமான KK மார்ட்- டிற்கு சொந்தமான மற்றொரு கிளை கடையில் இன்று பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பகாங், குவாந்தானில் சுங்காய் இசாப்-பில் உள்ள KK Mart- டிற்கு சொந்தமான கடையில் அதிகாலை 5.40 மணியளவில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் வான் மோஹட் சஹாரி தெரிவித்தார்.

அந்த பல்பொருள் விற்பனை கடையின் வாசல்படியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, முன்புறம் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

முன்வாசலில் பொருட்களை அடுக்கி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் 4 ரேக்குகள் ( REK ) தீயில் அழிந்துள்ளன. இதனால் 500 வெள்ளி மதிப்புள்ள பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை, பேரா, பீடோர்-ரில் உள்ள KK மார்ட் கடையில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் நடத்திய பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின்னர் KK மார்ட் குழுமத்திற்கு சொந்தமான மற்றொரு கடையில் அதே பாணியில் பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்