Oct 5, 2026
Thisaigal NewsYouTube

அடைக்கலம் புகுந்தோர் விவகாரம் ‘டைம் பாம்’ ஆகலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடைக்கலம் புகுந்தோர் விவகாரம் ‘டைம் பாம்’ ஆகலாம்

மலேசியாவில் அடைக்கலம் புகுந்தோர் விவகாரம் அரசாங்கம் உறுதியுடனும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மோசமாக்கும் ‘டைம் பாம்’ ஆக மாறக்கூடும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் எச்சரித்தார்.

மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரோஹிங்கியா அடைக்கலம் புகுந்தவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பதிவு செய்யப்படாதவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று சையிட் சாடிக் கூறினார்.

நாடாளுமன்றத்தில் அடைக்கலம் புகுந்தவர்களை நிர்வகிப்பது தொடர்பான சிறப்புத் தேர்வுக் குழு அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய சையிட் சாடிக், மனிதாபிமான அணுகுமுறையைத் தொடர வேண்டும் என்றாலும், புதிய வருகைகளைத் தடுக்க கடற்படை மற்றும் மலேசிய கடல்சார் அமலாக்க முகமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், மலேசியா மட்டும் இந்தச் சுமையை ஏற்காமல் அண்டை நாடுகளும் வளர்ந்த நாடுகளும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →