Sep 28, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்
தற்போதைய செய்திகள்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

Share:

மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலியின் நல்லுடனானது இன்று காலை 10.48 மணியளவில், தேசிய இருதயக் கழகமான ஐஜேஎன்னில் இருந்து, சிலாங்கூர் மாநிலம், ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள தெ மைன்ஸ் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, அவரது உடல் ஐஜேஎன்னில் புறப்பட்டபோது அங்கு சோகமான சூழல் நிலவியது.

அவரது பிள்ளைகள் டத்தின் படுகா மரினா மாகாதீர், டான் ஶ்ரீ மொக்ஸானி மகாதீர் மற்றும் டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், கூட்டத்தை நிர்வகிக்கவும் போக்குவரத்தை சீராகக் கட்டுப்படுத்தவும், போலீசாரும், ஐஜேஎன் பாதுகாப்புப் பணியாளர்களும் நுழைவாயிலில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளையில், ஊடகவியலாளர்களும் அங்கு கூடியிருந்தனர்.

இதனிடையே, மருத்துவம் மற்றும் சமூக நலத்துறையில் முக்கிய பங்காற்றிய மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலிக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களும் தங்களது ஒலிபரப்புகளை எளிமைப்படுத்தி, மாற்றியமைக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News