கோலாலம்பூர், டிசம்பர்.23-
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் உயர் இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நடப்பு சட்டத்தில் உள்ள சட்ட ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப கிடைக்கப் பெற்ற ஆதாராங்களை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை சுயேட்சையாகவும், நிபுணத்துவ அடிப்படையிலும் நடைபெற்று வருவதாக விளக்கினார்.
சம்பந்தப்பட்ட உயர் இராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் பெருமளவிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக ஒரு சமூக ஆர்வலர் அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.








