ஈப்போ, ஆகஸ்ட்.28-
ஈப்போ, கம்போங் ஜாவா, ஜாலான் ஹோர்லி அருகில் உள்ள ஒரு குறுக்குப் பாதையில் ஆடவர் ஒருவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உளவுத்துறை மூலம் கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் 32 வயதுடைய அந்த நபர், கோலாலம்பூர் டிபிஎஸ் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
லோரி ஓட்டுநர் என்று நம்பப்படும் அந்த ஆடவரிடமிருந்து இரண்டு சாவிகள், ஒரு லோரி மற்றும் இரண்டு கைப்பேசிகளைப் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நபர், ஏற்கனவே மூன்று குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளார்.
நேற்று காலை 6 மணியளவில் திருநங்கையைப் போல் காணப்படும் நபரை வெள்ளை நிற லோரியினால் மோதி தள்ளிய பின்னர் அவரின் உடல் மீது சக்கரங்களை ஏற்றியதாக அங்கு பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக அந்த நபர், துரத்தப்பட்ட காட்சியும் ரகசிய கேமரா பதிவில் தெரிய வந்துள்ளதாக ஏசிபி அபாங் ஸைனால் தெரிவித்தார்.








