Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஜாலான் துன் சார்டோன் சாலை மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜாலான் துன் சார்டோன் சாலை மூடப்பட்டது

Share:

பாலிக் பூலாவ், அக்டோபர்.23-

இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் நிலச்சரிவு மற்றும் மரம் பெயர்த்துக் கொண்டு சாய்ந்தது விளைவாக பினாங்கு, பாலிக் பூலாவ், ஜாலான் துன் சார்டோன் சாலை, அனைத்து வகையான போக்குவரத்துக்கும் மூடப்பட்டுள்ளது.

மாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் காரணமாக பாலிக் பூலாவையும், பாயா தெருபோங்கையும் இணைக்கும் பிரதான சாலை மூடப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்தார்.

எனினும் இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. சாலையில் துப்புரவு பணி நடைபெற்று வருகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சாலை மூடப்பட்டு இருக்கும் என்று ஸைரில் கீர் குறிப்பிட்டார்.

Related News