பாசிர் குடாங் , ஆகஸ்ட் 12-
எட்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ஆசிரியை ஒருவர், தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், அந்த ஆசிரியையின் முன்னாள் காதலன் என்று கூறப்படுவதை அந்தப் பெண்ணின் கணவர் மறுத்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் தனது மனைவியுடன் ஒன்றாக படித்தவரான அந்த நபர், தனது மனைவியின் வர்த்தக சகாவே தவிர முன்னாள் காதலன் அல்ல என்று கணவர் முகமது யூசுப் மொக்தார் தெரிவித்தார்.
ஜோகூர், கோத்தா மசாய் 3, பாசிர் குடாங்,- கைச் சேர்ந்த 33 வயது ஆசிரியை இஸ்திகோமா அஹ்மத் ரோஸி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், அவரின் முன்னாள் காதலன் என்று கூறப்படுவது தொடர்பில் தமது குடும்பத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக முகமது யூசுப் குறிப்பிட்டார்.
அந்தப்பெண்ணின் சிதையுண்ட உடல், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி, கம்போங் தஞ்சூங் ரிமாவ், புலாவ் செபாங் அலோர் கஜா, மலாக்கா- வில் ஒரு கால்வாயில் கண்டு பிடிக்கப்பட்டது. இக்கொலை தொடர்பில் 37 வயது முன்னாள் ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.








