குவந்தான் பெனோர் சிறைச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு கஞ்சி தயாரித்தல் நிகழ்ச்சியில் மாமன்னரின் துணைவியார் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கன்டாரியா 16 கைதிகளுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிறை கைதி, 16 வருடமாக தான் சிறையில் இருந்து வருவதாகவும் இதுவே முதல் முறை சிறையில் தான் நோன்பு கஞ்சி தயாரிப்பதாக கூறிக் கொண்டார்.
சிறை வளாகத்தில் தயாரிக்கப்பட்ட 2500 நோன்பு கஞ்சி டப்பாக்கள் கைதிகளுக்கும் அங்கு பணிப்புரியும் சிறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








