Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஜாவி விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது
தற்போதைய செய்திகள்

ஜாவி விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது

Share:

மஇகா தலைமையக புதிய கட்டட நிர்மாணிப்புப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இந்து சமயச் சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் இந்திய முஸ்லிம் சமயப் போதகர் ஒருவர், டோவா வாசித்தது தொடர்பில் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய இலாகாவான ஜாவி விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

அந்த இந்திய முஸ்லிம் சமயப் போதகரின் நடவடிக்கைகள் ஃபட்வா வை மீறிய செயலா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அந்த சமய இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சமயப் போதகர் , குற்றம் இழைத்து இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் 1997 ஆம் ஆண்டு கூட்டரசுப் பிரதேச ஷரியா குற்றவியல் சட்டம் 559 பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படும் ஜாவி அறிவித்துள்ளது.

இந்து அர்ச்சகர்கள் வேதமந்திரத்தை முழுங்கி கொண்டிருந்த வேளையில் அவர்களின் முன்னிலையில் அந்த சமயப் போதகர் டோவா வாசித்தது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக ஜாவி தெரிவித்துள்ளது.

Related News